search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மாணவர்கள் பாதிப்பு"

    ஒட்டன்சத்திரத்தில் முன் அறிவிப்பு இல்லாத மின்தடையால் 10, 12-ம் வகுப்பு பொதுத் தேர்வுகளுக்கு படிக்கும் மாணவர்கள் தேர்வுகளுக்கு படிக்க முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.
    ஒட்டன்சத்திரம்:

    ஒட்டன்சத்திரம் நகராட்சிக்குட்பட்ட 18 வார்டுகளில் சுமார் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இங்கு முக்கிய வணிக நிறுவனங்கள், மார்க்கெட், பள்ளிகள், கல்லூரிகள், நீதிமன்றங்கள் என பல்வேறு நிறுவனங்கள் செயல்பட்டு வருகிறது.

    நகர் பகுதியில் இரவு நேரங்களில் முன்னறிவிப்பில்லாமல் அடிக்கடி மின் தடை ஏற்படுகிறது. இதனால் வியாபாரிகளும், பொதுமக்களும் மற்றும் மாணவ, மாணவிகளும் தங்கள் பணிகளை செய்ய முடியாமலும், ஓய்வு எடுக்க முடியாமலும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

    இதுபற்றி மாயவன் கூறுகையில், இரவு நேர மின் தடையால் தற்பொழுது 10, 12-ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் நடைபெற்று வருகிறது. மின் தடையால் மாணவர்கள் தேர்வுகளுக்கு படிக்க முடியாமல் மிகுந்த அவதிப்பட்டு வருகின்றனர். இது பற்றி மின் வாரியத்திடம் புகார் கூறினால் நகர் பகுதிகளில் மின் டிரான்ஸ்பார்மர் மாற்றும் பணி நடைபெற்று வருகிறது. அதனால் மின் தடை தவிர்க்க முடியாது என்று கூறுகின்றனர்.

    இந்த மின்தடையை பயன்படுத்தி திருட்டு, கொள்ளை போன்ற சமூக விரோத செயல்கள் நடைபெறுகிறது. எனவே தேர்வு எழுதும் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு அறிவிக்கப்படாத மின் தடையை சரிசெய்து கொடுக்க வேண்டும் என்றார்.

    செங்கம் அருகே பிரியாணி சாப்பிட்ட வாம் தொண்டு நிறுவன விடுதியில் தங்கியிருந்த 77 மாணவர்கள் உடல்நலம் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    செங்கம்:

    செங்கம் அருகே உள்ள பொறையாறு, அரட்டவாடி ஆகிய இடங்களில் வாம் தொண்டு நிறுவனத்துக்கு சொந்தமாக மாணவர் விடுதிகள் செயல்பட்டு வருகிறது. இதில் 77 பள்ளி மாணவர்கள் தங்கியிருந்து படித்து வருகின்றனர்.

    இந்த மாணவர்கள் நேற்று திருவண்ணாமலை தொண்டு நிறுவனத்தில் நடந்த புத்தாக்க பயிற்சியில் பங்கேற்றனர். அங்கு வழங்கப்பட்ட பிரியாணி சாப்பிட்டு விட்டு விடுதிக்கு திரும்பினர்.

    இரவு அனைத்து மாணவர்கள் உடலில் அரிப்பு ஏற்பட்டு கொப்பளங்கள் உருவானது. இதையடுத்து அனைத்து மாணவர்களும் செங்கம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. உணவு ஒவ்வாமை காரணமாக மாணவர்கள் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

    ×